நாமக்கல், டிச. 9 . பரமத்தி அடுத்த கபிலர் மலைப்பகுதியில் நூறாண்டு களுக்கு மேலாக பயன்ப டுத்தி வந்த நடைபாதை ஆக்கி ரமித்திருப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் திங்க ளன்று காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
கபிலர்மலை பகுதியில் பொதுமக்கள் 100 ஆண்டுக ளாக பயன்படுத்தி வந்த, நடை பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை அகற்ற வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்வரையில் காத்திருப்பது என மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடு பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பர மத்தி வேலூர் வட்டக் குழு சார்பில் நடை பெற்ற காத்திருப்புப் போராட்டம் கபிலர்மலை பி.டி.ஓ. அலுவலகம் முன்பு நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தங்க மணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியினர், கபி லர்மலை கடைவீதி பகுதியில் ஊர்வலமாக துவங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா ளர், காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எதிர்வரும் 20 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு பகுதியினை உரிய முறையில் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றி தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த னர். இதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசே கரன், வட்டக் குழு உறுப்பினர்கள் கருப்பையா, செல்வராணி, ராமச்சந்திரன், மூத்த தோழர் குமரேசன், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.