districts

img

அதிக ஒலி எழுப்பிச்சென்ற பேருந்தை சிறை பிடித்த மக்கள்

நாமக்கல், டிச. 5- அதிக ஒலி எழுப்பி சென்ற தனியார் பேருந்தை சிறை பிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை கடந்து  ராசிபுரம், சேலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ண கிரி ஆகிய பகுதிகளுக்கு தினசரி தனியார் பேருந்து மற்றும்  அரசு பேருந்துகள் அதிகளவு இயக்கப்படுகின்றது. இப்பகுதி  வழியாகச் செல்லும் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து கள் அதிக ஒலி எழுப்பியவாறு அதிவேகமாகவும் செல்வ தால் விபத்துக்கள் ஏற்படுவதுடன் வாகனத்தில் செல்வர்கள்  அச்சமடைந்து வருகின்றனர்.

மேலும் இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் செல் லும் போது அதிகமான இரைச்சலுடன் ஒலிப்பானை எழுப்புவ தால் நிலைத்தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நடைபெறு கிறது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர் வலர்கள் அதிக ஒலி எழுப்பிச் செல்லும் பேருந்துகள் குறித்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை  விடுத்து வருகின்றனர். 

இதன்தொடர்ச்சியாக, வியாழனன்று ஒட்ட மெத்தை பகுதி யில் இருசக்கர வாகனத்தில் இருவர் அவ்வழியாக வந்து  கொண்டிருந்தபோது, சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி  வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து இருசக்கர  வாகனத்தை முந்தி செல்ல அதிக ஒலி எழுப்பியது. இதை யடுத்து பயத்தில் இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்த னர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஒன்று கூடி தனி யார் பேருந்தை சிறைப்பிடித்து, பேருந்து ஓட்டுனர் மற்றும்  நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைய றிந்து அங்கு வந்த பள்ளிபாளையம் காவல்துறையினர் பேருந்தை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். போக்குவரத்து துறை யிடம் அதிக ஒலி எழுப்பும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க முறையிடுவதாக உறுதி அளித்த பின் கலைந்து சென்றனர்.

பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.