நாமக்கல், டிச.5- வணிக வாடகை கட்டடங்களுக்கு ஒன்றிய பாஜக தலைமையிலான அரசு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்தி ருப்பதை கண்டித்து, பெருந்திரள் அர்ப் பாட்டத்திற்கு வணிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்டத் தலை வர் ஜெயக்குமார் வெள்ளையன் புத னன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப் பில் கூறியுள்ளதாவது,
வணிகர்களும், பொதுமக்களும் எதிர்கொள்ளும் பல் வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, டிச. 11 ஆம்தேதி தமிழகம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடை பெறுகிறது. ஒன்றிய அரசின் வாடகையின் மீதான 18 சதவிகித வரி விதிப்பை திரும்ப பெற்றிட வலியுறுத்தியும், மாநில அரசு ஆண்டுதோறும் 6சதவிகிதம் கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்பப்பெற வலி யுறுத்தியும், வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும், அந்நிய நாட்டு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரியும், TRAI விதிமுறைகளை மீறி சாலை ஓரங்களில் குடைகள் அமைத்து சிம் கார்டு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நாமக் கல் நகர், பூங்கா சாலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெய குமார் வெள்ளையன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் மற்றும் வணிகர்க ளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் ஆர்பாட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரமைப்பின் 46 இணைப்பு சங்கங்களை சார்ந்த நிர்வாகி களும், உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆர்பாட்டத் தில் சங்கம் சாரா வணிகர்களும், பொது மக்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள் ளார்.