நாமக்கல், டிச.10- வாடகைக் கட்டிடங்களுக்கு ஜிஎஸ்டி விதித்த, ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.
வணிகப் பயன்பாட்டு கட்டிடங்களின் வாடகைக்கு ஒன் றிய அரசு ஜிஎஸ்டி என்கிற பெயரில் 18 சதவிகிதம் வரியை விதித்திருக்கிறது. இது, ஏற்கனவே நெருக்கடியிலிருந்து மீள முடியாத நிலையில் சிக்கித்தவிக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் குரல்வளையை நெரிக்கும் செயலாகவே அமையும். இதனை மீட்டுடெடுப்பதற்கு பதிலாக, மேலும் சுமையை ஏற்றிருப்பது தொழில் உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகரச் செயலாளர் எஸ்.சீனிவாசன் தலைமை வகித் தார். இதில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.கதிர்வேல், முன்னாள் தலைவர்கள் ஐ.ராயப்பன், ஆர்.மனோகரன், மாவட்ட செயற்குழு எம்.கணேஷ்பாண்டியன், விவசாய சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலாயுதம், ஆண்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆதிநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விஜயபாரதி நன்றி கூறினார்.