நாகர்கோவில், ஆக.31- கன்னியாகுமரி மாவட்டத்தில் வைக்கலூர் பகுதியில் தீக்கதிரின் துணை முகவர் பொறுப்பை ஏற்று நீண்டகாலம் வீடுவீடாக விநியோ கம் செய்து வந்தவர் ஒய்.வல்சலம். உடல்நலக்குறைவால் ஆக.30 வெள்ளியன்று மாலை மரண மடைந்தார்.
கட்சியின் மூத்த தோழர்களில் ஒருவரான ஒய்.வல்சலம் வைக்கல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யின் துணைத் தலைவராக செயல் பட்டுள்ளார். முதுகலை பட்டதாரி யான இவர் சிறந்த ஓவியருமா வார். ஆங்கிலத்திலும் இந்தியிலும் புலமை பெற்ற இவர் டி.மணி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது அவரது உதவியாளராக இருந்துள்ளார். காஞ்ஞாம்புறம் கட்சி அலுவலக செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இவருக்கு சுனஜா என்கிற மனைவி, சஜிந்த்லால் என்கிற மகன், சஞ்சிதா என்கிற மகளும் உள்ளனர்.
ஒய்.வல்சலம் உடலுக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விஜய மோகன், உஷாபாசி, கே.தங்கமோகனன், வி.அனந்த சேகர், என்.எஸ்.கண்ணன், மூத்த தலைவர் என்.முருகேசன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் மேரி ஸ்டெல்லாபாய், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். ரவி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மலை விளைபாசி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் முகமது புறோஸ்கான், தோட்டம் தொழி லாளர் சங்க தலைவர் பி.நடராஜன், சிபிஎம் வட்டார செயலாளர்கள் அலெக்ஸ், தங்கமணி, ரெஜி, அஜித், சர்தார்ஷா, வில்சன், திமுக நிர்வாகி அப்துல் சலாம், சிபிஐ துரைராஜ், சிபிஐஎம்எல் தனபால் மற்றும் கொல்லங்கோடு நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக கொல்லங்கோடு கட்சி அலுவலகத்தில் வல்சலத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக வைக்கலூரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் நடைபெற்றது. தொடர்ந்து அஞ்சலி கூட்டமும் நடந்தது.