districts

img

10 ஆண்டுகளில் பத்து லட்சம் பேர் தற்கொலை மோடி கூறியது அனைத்தும் பொய் வாக்குறுதி நாகர்கோவிலில் விஜு கிருஷ்ணன் சாடல்

நாகர்கோவில், டிச.2- மோடி ஆட்சியின் பத்தாண்டு களில் பத்து லட்சம் பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். உலகில் வேறு எங்கும் ஆயிரம்  ஆண்டுகளின் கணக்கு எடுத்தால்கூட இப்படி ஒரு நிலை யைப் பார்க்க முடியாது; மோடி கூறியது அனைத்தும் பொய் வாக்குறுதிகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் விஜு கிருஷ்ணன் தெரிவித்தார்.

கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட 24 ஆவது மாவட்ட மாநாட்டு பொதுக்கூட்டம் நாகர்கோவில் அண்ணா விளை யாட்டு அரங்கம் முன்பு நடந்தது.  மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.மோகன் வரவேற்றார். மத்தியக் குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.நூர்முகமது, கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அந்தோணி, எம்.அகமது உசைன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் ஆகியோர் பேசினர்.

எரியும் மணிப்பூர்

இதில் மத்தியக் குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன் பேசியதாவது:

நான் மணிப்பூர் மாநில மாநாட்டில் பங்கேற்றுவிட்டுத் தான் இங்கு வந்திருக்கிறேன். ஒன்றரை ஆண்டுகளாக பற்றி எரியும்  மணிப்பூரில் 200க்கும் மேற்பட்ட  மக்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். 60 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடு களை, சொத்துக்களை இழந்து அகதிகள் முகாம்களில் தஞ்ச மடைந்துள்ளார்கள். அந்த மாநி லத்திலும் மத்தியிலும் பிரதமர் குறிப்பிடும் பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சிதான் நடக்கிறது. மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த முடியாத பிரதமர்தான் உக்ரைன் போரையும், இஸ்ரேல் போரையும் நிறுத்தப்போவதாக கேலிக்கூத்து செய்கிறார்.  

நெருக்கடியில் முதலாளித்துவம்

2014 ஆம் ஆண்டு பல வாக்குறு திகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தது பாஜக. விவாசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக கூறினார்கள். நூறுநாள் வேலை யை இரட்டிப்பாக்குவதாக கூறி னார்கள். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி னார்கள். ஆனால் இந்த பத்தாண்டு கால ஆட்சியில் ஏற்பட்ட நெருக் கடிகளால் 1,12,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் 3,25,000 தினக்கூலிகள் தற் கொலை செய்துள்ளார்கள். அர சாங்கம் சொல்லும் இந்த கணக்கின் படியே சுமார் 5 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளார்கள்.

மேற்குவங்கத்தில் இத்தகைய தற்கொலைகள் இல்லை என மம்தா பானர்ஜி கூறுகிறார். இந்த ஆண்டு ஜனவரியில் அம்மாநில விவசாயிகளின் நிலை குறித்து ஆய்வு நடத்தியபோது அங்கும் தற்கொலைகள் நடந்துள்ளது தெரியவந்தது. குஜராத்தில் தற் கொலை இல்லை என்கிறார்கள். அதுவும் பொய். மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி என்கிற டிவிசனில் மட்டும் கடந்த 6 மாதங்களில் 557 விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டுள்ள னர். இது மோடியின் இந்தியா. அர சாங்கம் கொடுக்கும் தற்கொலை கணக்கில் பெண்கள், பட்டியல் இனம், பழங்குடியினர் இல்லை.  இவையெல்லாம் இணைந்தால் பத்தாண்டுகளில் பத்து லட்சம் பேர் தற்கொலை செய்திருப்பார்கள். உலகில் வேறு எங்கும் ஆயிரம் ஆண்டுகளின் கணக்கு எடுத்தால்கூட இப்படி ஒரு நிலையை பார்க்க முடி யாது. இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

வெட்கமற்ற மோடி அரசு

பாஜக முதலாவதாக ஆட்சிக்கு வந்த 14 ஆவது நாள் நானும் தோழர் ஹன்னன் முல்லாவும் விவசாய அமைச்ச ரை சந்தித்தோம். விவசாயிகளின் உற்பத்தி செலவில் 50 சதவிகி தம் கூடுதலாக ஆதாரவிலை கொடுப்பதாக சொன்னீர்களே என்று அவரிடம் கேட்டபோது, தேர்தலில் ஓட்டுக்காக கொடுத்த வாக்குறுதி, அதையெல்லாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று வெட்கமே இல்லாமல் கூறினார். உச்சநீதி மன்றத்திலும் இப்பிரச்சனை வந்த போது அப்படி விவசாயிகளுக்கு வழங்க முடியாது என்று தெரி வித்தது மோடி அரசு.

2016 இல் புதிய வாக்குறுதி யாக விவசாயிகளின் வருவாய்  இரட்டிப்பாக்கப்படும் என்றார்கள். இப்போது 2022 இல் கணக்கின்படி ஒரு விவசாயி குடும்பத்திற்கு ரூ.11  ஆயிரம்கூட வருமானம் இல்லை. பொய் சொல்லும் அரசாங்கம்தான் மத்தியில் உள்ளது. அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக விவசாயிகளுக்கு எதிரான 5  வேளாண் சட்டங்களை கொண்டு வந்தார்கள். அதற்கு எதிராக விவ சாயிகள் 380 நாட்கள் நடத்திய வர லாற்றுச் சிறப்பு மிக்க போராட்ட த்தை உலகமே வியந்து பார்த்தது. அந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் மோடி அரசுக்கு ஏற்பட்டது. இந்த போராட்டத்துக்கு முன்னோடியாக நாசிக்கில் இருந்து மும்பை வரை விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் நடத்திய போராட்டம் மகாராஷ்டிர அரசை பணியவைத்தது. முன்வைத்த 12 கோரிக்கைகளையும் அந்த அரசு ஏற்றுக்கொண்டது.

விளை பொருட்களின் விலை  உள்ளிட்ட அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. விவசாயிகளின் நிலை கீழ்  நோக்கியே செல்கிறது. மோடியின் அரசு அதானி, அம்பானி, டாடா, பிர்லாவை மட்டுமே வாழ வைக்கும் அரசாக உள்ளது. பொய்யான வாக்குறுதிகளை மக் களிடம் தெரிவித்து ஆட்சிக்கு  வந்த மோடி அரசு விரைவில் முடி வுக்கு வரும். புரட்சியைப்பற்றி லெனின் கூறியதுபோல் பல பத்தா ண்டுகளில் நடக்காத மாற்றம் ஒரு சில வாரங்களில் நடக்கும்.   இவ்வாறு அவர் பேசினார்.