நாகர்கோவில், ஏப்.27- பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை அனு பவித்து வரும் நாகர்கோவில் காசி யின் நண்பன் மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்தார். இந் நிலையில் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவர் கைது செய்யப்பட்டு, நாகர் கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி என்ற சுஜின். தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் என சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமாகி தனது வலை யில் வீழ்த்தினார். இவரால் பாதிக்கப் பட்ட பல பெண்கள் அளித்த புகாரின் பேரில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஏராளமான தக வல்களும் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான விபரங்களும் வெளியான நிலையில் காசி மீதான இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப் பட்டது.
சிபிசிஐடி காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஒரு இளம் பெண்ணை காரில் கடத்திச் சென்று காசி பாலியல் வல்லுறவு செய்த சம்பவத்தில் அவருடன் மற்றொரு இளைஞரும் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக அந்த இளம் பெண் கூறியிருந்தார். மேலும், காசியின் செயல்களுக்கு அவனது தந்தை தங்க பாண்டியனும் துணை போனது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
அதை ஒட்டி இந்த வழக்கில் நாகர்கோவில் காசி, அவனது நண்பன் ராமன் புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் சிங் (44), காசியின் தந்தை தங்கபாண்டியன் ஆகிய மூவர் மீது நாகர்கோயில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. நாகர்கோவில் காசியும் தந்தையும் கைதான நிலையில் அவனது நண்பன் ராஜேஷ் சிங் தேடப்பட்டு வந்தார். ஆனால், ராஜேஷ் சிங் துபாய் நாட்டில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீ சார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
துபாயில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த ராஜேஷ் சிங் தாய கம் திரும்புவது குறித்து கண்காணித்து வந்தனர். அதன்படி சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய ராஜேஷ் சிங்கை சிபிசிஐடி காவல்துறை யினர் கைது செய்து நாகர்கோவி லுக்கு அழைத்து வந்தனர். பின்னர் நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் ஆஜர் படுத்திய பின்பு ராஜேஷ் சிங் நாகர் கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.