நாகர்கோவில், டிச.23- நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான செம் மாங்குள பூங்காவை மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகர்கோவில் அவ் வை சண்முகம் சாலை யில் அமைந்துள்ள பூங்கா மற்றும் செம் மாங்குளக்கரை மற்றும் மாநகராட்சிக்கு சொந்த மான இடங்களை மேயர் ரெ.மகேஷ் ஆய்வு மேற்கொண்டு அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவு குப்பைகளை உடனடி யாக மாநகராட்சிஅதிகாரிகளிடம் அறிவுறுத்தியதின் பேரில் ஜேசிபி இயந்திரம் மூலம் குப்பைகள் உடனடி யாக அகற்றப்பட்டது.
உடன் மாமன்ற உறுப்பினர் அக்ஷயா கண்ணன், இளநிலை பொறியாளர்செல்வன் ஜார்ஜ், சுகாதார அலு வலர் முருகன் ,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த் மற்றும் பலர் உடனிருந்தனர்.