நாகர்கோவில், டிச. 7-
வறட்சி அல்லது கோடை காலங்களில் உணவும் தண்ணீரும் தேடி வன விலங்குகள் விளைநிலங்களை நோக்கி வருவது இயல்பு. ஆனால் மழை பெய்து காடுகள் செழித்துள்ள நிலையில் விளைநிலங்களை நோக்கி வன விலங்குகள் படையெடுத்து வருகின்றன. வனத்துக்குள் போதிய உணவு கிடைக்காதது அல்லது வனத்துக்குள் இயற்கை வள சூறையாடல் போன்ற சூழல் முறைகேடுகள் நடக்கின்றனவா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்யவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் 1729 மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒருபகுதி (32.5 சதவிகிதம்) காடு களைக் கொண்டுள்ளது. இவற்றில், யானை, புலி, சிறுத்தை, கரடி, பன்றி உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்கு கள் வசிக்கின்றன. அடர்ந்த காடு களுக்குள் மலைகளும் ஆறுகளும் சிற்றருவிகளும் ஏராளமாக உள்ளன. போதிய மழை பெய்துள்ள நிலையில் வன விலங்குகளுக்கு காட்டுக்குள் குடிநீர் மற்றும் உணவுக்கு பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை என்பது வன விலங்குகள் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில் அண்மை காலமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் வன விலங்கு கள் புகுந்து நாசம் விளைவித்து வருகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ரவி கூறுகையில், வனத்துறையினர் மக்கள் வசிப்பிடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தொல்லை ஏற்படுத்துகிறார்கள். மறுபுறம் மக்களுக்கு தொல்லை தரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த முன்வரவில்லை. மக்கள் நடமாட முடியாத காட்டுக்குள் இருக்க வேண்டிய விலங்குகள் அங்கிருந்து வெளியேறும் காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார்.
திடல் பகுதியில் யானைக்கூட்டம்
தோவாளை தாலுகா திடல் பகுதியில் காட்டு யானை கூட்டம் புகுந்து தென்னை, வாழை உட்பட விவசாய பயிர்களை அழித்துள்ளன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். ஆர். சேகர், செயலா ளர் ஆர். ரவி, கடையாலுமூடு பேரூ ராட்சி தலைவர் ஜூலியட் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட னர். தமிழக அரசும் வனத்துறையும் அழிந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். யானைகள் மற்றும் வன விலங்குகள் வராமல் இருக்க அகழிகள் உடனடியாக அமைக்க பட வேண்டும். யானை வரும் வழி தடத்தில் உள்ள பாலத்தை பொதுப்பணித்துறை உடனடி யாக உடைக்க வேண்டும். பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பன்றிகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினர்.