districts

img

அமித்ஷா பதவி வகிப்பது இந்திய நாட்டின் துரதிர்ஷ்டம் சிபிஎம் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி பேச்சு

நாகர்கோவில். டிச. 23- அமித்ஷா பதவி வகிப்பது இந்திய நாட்டின் துரதிர்ஷ்டம் என நாகர்கோவிலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் குமரி மாவட்ட சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி பேசினார். அரசியல் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை இழிவு படுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதன்படி குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம்  குமரி மாவட்ட  செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது, இந்திய அரசியல் மற்றும் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரை இழிவு படுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும். அல்லது பதவியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

அதானி, அம்பானியின் ஊழல் செயல்பாடுகளை மறைக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தையை இழிவு படுத்தி மக்களை திசை திருப்ப பார்க்கின்றனர். ஒன்றிய மோடியின் அரசு அதா னியை காப்பாற்ற பல்வேறு முயற்சி களில் ஈடுபட்டு வருகிறது.

அதில் இதுவும் ஒன்றே என தெரிகிறது. இதே அமித்ஷாவால் 3 ஆயிரம் முஸ்லிம் இனத்தவர்கள் படு கொலை செய்யப்பட்டனர். ஏழை எளிய மக்களை கண்டுகொள்ளாத அரசு மோடி அரசு. தேசத் தந்தை மகாத்மா காந்தி, சட்ட மாமேதை அம்பேத்கர் உள்ளிட்டோர்களை ஓரம் கட்டுவதே மோடி அரசின் நோக்கமாக உள்ளது. அமித்ஷா அம்பேத்கரை இழிவு படுத்தி பேசி யது தற்போது இந்திய நாடு முழுவ தும் மக்களிடையே வெறுப்பை ஏற் படுத்தியுள்ளது. ரவுடி என கூறும் வகையில் அமித்ஷா நடந்து கொள்கிறார்.

இந்திய இறையாண் மைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இவர் போன்றவர்கள் ஆட்சி யில் பதவியில் இருப்பது இந்திய  நாட்டின் துரதிர்ஷ்டம் என்றே கூற லாம். இவர் குஜராத் மாநிலத்தின் அமைச்சராக இருக்கும் போதே அங்குள்ள ஏழை,எளிய மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏழை எளிய மக்கள், தலித் மக்கள், பெண்க ளுக்கு எதிராக செயல்படும் இந்த ஒன்றிய அரசின் போக்கு கண்டிக்க தக்கது. டாக்டர் அம்பேத்கரை இழிவு படுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது பதவியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

இல்லை என்றால் இந்திய மக்களிடையே இவர் பல பிரச்சனைகளை உருவாக்குவார்  என ஆர்.செல்லசுவாமி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம்  மாநில குழு உறுப்பினர் ஆர்.லீமா றோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.அகமது உசைன், என்.எஸ்.கண்ணன், எஸ்.அந்தோணி, எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் பேசி னர். மூத்த தோழர்கள் என்.முருகே சன், கே.மாதவன், உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.