districts

கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை கையாடல் செய்த தர்மபுரம் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை தேவை : சிபிஎம் கோரிக்கை

நாகர்கோவில். டிச.23-
பல கோடிக் கணக்கிலான ரூபாயை கையாடல் செய்த குமரி மாவட்டம் தர்மபுரம் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மாவட்ட சிபிஎம்  சார்பில் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஎம்  குமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் தெரிவித்தா வது: ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தர்மபுரம் ஊராட்சியில் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதும், கையாடல் செய்வது குறித்தும் தக வலறிந்த சிபிஎம் கட்சியினர், முழு மூச்சாக அந்த செயல்களை நோட்டமிட்டு ஆதாரத்தை தேடினர்.

அதில் கிடைத்த ஆதாரங்கள்  மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்ப டைக்கப்பட்டது. அதன்படி, தனி  தனிக்கை குழு அமைத்து அங்கு கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ய குழு நியமனம் செய்யப் பட்டது. அந்த தணிக்கை குழு மூலம் குறிப்பிட்ட தொகையை கையாடல் செய்தது தெரிய வந்தது. எனவே தணிக்கை குழு அந்த பணத்தை திரும்பி கட்ட அறிவுறுத்தி நோட் டீஸ் அனுப்பியது. குறிப்பிட்ட தொகையை மட்டுமே தணிக்கை குழு கண்டு பிடித்துள்ளனர். ஆனால் அங்கு மக்கள் பணம் ரூ.4 கோடிக்கு மேல் கையாடல் செய்துள் ளனர்.

எனவே ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தை திரும்ப பெற வேண்டும் என சிபிஎம்  சார்பில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு  நடத்தப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் மக்கள் வரிப்பணத்தை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரு வது சரியல்ல. மக்கள் பணம் மக்க ளுக்கே செலவிடப்பட வேண்டும்.

தர்மபுரம் ஊராட்சியில் சாலைகள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் அதிகம் தேவைப்படும் நிலையில். ரூ.4 கோடிக்கு மேல் கையாடல் செய்துவிட்டு சொகுசாக வாழும் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன். அனைத்து தொகையையும் திரும்ப பெற வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெறும் வரை சிபிஎம்  போராட்டம் தொட ரும். வரும் 26ஆம் தேதி அன்று தர்ம புரம் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரும் போராட்டம் நடத்தப்படுகிறது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட அளவில் பொது மக்கள் மற்றும் கட்சியினரை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.