districts

img

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு திருவிழா லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

நாகப்பட்டினம், ஆக. 30- நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு திருவிழாவில் வியாழனன்று மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடியானது, லட்சக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க ஏற்றப்பட்டது.

மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாகவும், சமய நல்லிணக்க பூமிக்கு சான்றாகவும், சுற்றுலா வருவோருக்கு பொழுதுபோக்கு இடமாகவும் சிறந்து விளங்குவது வேளாங்கண்ணி ஆகும். இங்குள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் ஆண்டு பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். 

பத்து நாட்கள் 

பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை உலகெங்கும் உள்ள மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவார்கள். பல்வேறு மொழிகளில் வழிபாடுகள் நடைபெறும். தினந்தோறும் தேர் பவனி வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ள பகுதியில் நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து, மக்கள் பாத யாத்திரையாக வேளாங்கண்ணி நோக்கி வருவர்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய நிர்வாகத்தின் சார்பிலும் விழா ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. உணவு, தங்குமிடம், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் விழாவிற்கு வருகை தருபவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.