நாகப்பட்டினம், நவ.29- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப் பட்டினம் மாவட்டப் பேரவை வேதா ரண்யத்தில் நடைபெற்றது. இதில் கீழ் வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பா. ராணி தலைமை வகித்தார். வேதாரண்யம் வட்டச் செயலாளர் வி.எஸ்.இராமமூர்த்தி வரவேற்றார். மாநிலத் தலைவர் மு.அன்ப ரசு துவக்கி வைத்தார். மாவட்டச் செய லாளர் அ.தி.அன்பழகன், மாவட்டப் பொரு ளாளர் ப.அந்துவன் சேரல் ஆகியோர் பேசி னர். நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சு.சிவகுமார் வாழ்த்திப் பேசினார். மாநிலச் செயலாளர் சா.டானியல் ஜெய சிங் நிறைவுரையாற்றினார். மாநிலச் செயற் குழு உறுப்பினர் அ.அற்புதராஜ் ரூஸ் வெல்ட் நன்றி கூறினார். வேதாரண்யம் பகுதியில் மலர், பழங் கள் மற்றும் உப்பு சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும், நாகப்பட்டினம் நக ரின் மத்தியில் இயங்கிவரும் தற்போ தைய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையாக தொடர்ந்து செயல் படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மன்னார்குடி
அரசு ஊழியர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட 15-ஆவது பேரவை மாவட்டத் தலைவர் வெ.சோமசுந்தரம் தலைமையில் கூத்தாநல்லூரில் நடைபெற்றது. துணைத் தலைவர் வி.தட்சிணாமூர்த்தி வரவேற்றார். மாநிலச் செயலாளர் எஸ். கோதண்டபாணி துவக்க உரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் சே.பிரகாஷ், மாவட்டப் பொருளாளர் ஆகியோர் பேசி னர். ஓய்வு பெற்ற முன்னாள் மாநில மாவட்ட நிர்வாகிகள் எம்.சௌந்தரராஜன், எம்.ராஜமாணிக்கம் பாராட்டப்பட்டனர். மாவட்ட மகளிர் பேரவையில், மகளிர் துணைக் குழு அமைப்பாளர் டி.தமிழ் சுடர், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சந்திரசேகரன், மாநில தலைவர் மு.அன்பரசு, மாவட்ட இணைச்செயலாளர் டி.ராஜசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாநகராட்சி நகராட்சிகளில் நிரந்தர பணி இடங்களை அழித்திடும் அரசாணை எண்152 ஐ ரத்து செய்திட வேண்டும், திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த டெல்டா பகுதி என்ப தால் திருவாரூரில் வேளாண் கல்லூரி அமைத்திட வேண்டும், நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலத்தை காலம் தாழ்த்தா மல் உடனடியாக அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.