districts

தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் மாதர் சங்க மாநாடு வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஆக.11- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட 16-ஆவது மாநாடு துவாக்குடி மலை ஏ.ஆர்.எஸ் திருமண மண்டபத்தில் தோழர். மைதிலி சிவராமன் நினைவரங்கில் புத னன்று நடைபெற்றது.  மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் லிங்கராணி தலைமை வகித்தார். மூத்த  தோழர் சாரதா கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் கோமதி வர வேற்றார்.  அஞ்சலி தீர்மானத்தை திரு வெறும்பூர் தாலுகா பொருளாளர் நித்யா வாசித்தார்.  மாநில செயற்குழு உறுப்பினர் ராணி துவக்க உரையாற்றினார். வேலை அறிக்  கையை மாவட்டச் செயலாளர் மல்லிகா  வாசித்தார். பெல் சிஐடியு துணைத் தலை வர் அருணன் வாழ்த்திப் பேசினார். சிபிஎம் திருவெறும்பூர் தாலுகா செயலாளர் மல்  லிகா குமார் நன்றி கூறினார். மாநில துணைத் தலைவர் பாலபாரதி நிறைவுரையாற்றி னார்.  மாநாட்டில், மாவட்டத் தலைவராக ப. லிங்கராணி, செயலாளராக லால்குடி எம்.கோமதி, பொருளாளராக திருவெறும்பூர் மல்லிகாகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்  பட்டனர்.  முன்னதாக அண்ணா வளைவிலிருந்து 16 கொடிகளுடன் நூற்றுக்கணக்கான பெண்கள் அணிவகுத்த பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. மாநாட்டில், தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஏழை பெண்களுக்கு ரூ.ஆயிரம் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். வீடில்லா ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். நீண்ட காலமாக குடியிருக்கும் இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்  மானங்கள் நிறைவேற்றப்பட்டன.