நாகப்பட்டினம், டிச.5- நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடிக்கு உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்ட பிறகு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வலிவலம், கில்லுக்குடி, தெற்கு பனையூர், அகரம் உள்ளிட்ட பகுதியில் மழை வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களை, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு ஆறுதல் கூறிய பின்னர், செய்தியா ளர்களை சந்தித்த அவர், நாகை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக சுமார் 5000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி பல இடங்களில் அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பயிர்களை மாவட்ட நிர்வாகம் இதுவரை கணக்கெ டுப்பு நடத்தவில்லை. உடனடியாக கணக்கெடுக்கும் பணியினை தொடங்க வேண்டும். ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். குறுவை நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், குறுவை நெல்லுக்கு மட்டும் 17 சதவீதம் ஈரப்பதம் என்பதை 21 சதவீதம் என்ற அளவில் தளர்த்த வேண்டும். இதுகுறித்து சட்டமன்ற கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சித்தார்த்தன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.வடிவேல், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அருள் தாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.