நாகப்பட்டினம், ஆக.14 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பயணி கள் நிழலக கட்டிடம், புதிய ஆட்டோ நிறுத்தம் மற்றும் புதிய மிதிவண்டி நிறுத்தம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சி யர் ப.ஆகாஷ், தலைமையில் கீழ்வே ளூர் சட்டமன்ற நாகை மாலி திறந்து வைத்தார்.
ஆட்டோ நிறுத்தம்
கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட, கீழையூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட் டில் புதிய ஆட்டோ நிறுத்தம் வைக்கப்பட் டது. திருப்பூண்டி ஊராட்சி 9 வார்டு களை உள்ளடக்கியது. திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் மூலக்கடை பகுதி யில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய ஆட்டோ நிறுத்தம், சுற்றுவட்டாரப் பகுதி களுக்கு பொதுமக்கள் வந்து போவ தற்கு பெரிதும் பயன்பெறும் வகை யில் அமைந்துள்ளது.
மிதிவண்டி நிறுத்தம்
கீழையூர் ஊராட்சி ஒன்றியம், காரப்பிடாகை வடக்கு ஊராட்சியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மிதிவண்டி நிறுத்தம் திறந்து வைக்கப் பட்டது. காரப்பிடாகை வடக்கு ஊராட்சி 6 வார்டுகளை உள்ளடக்கியது. இவ்வூ ராட்சியில் 1,370 மக்கள் வசித்து வரு கின்றனர்.
காரப்பிடாகை வடக்கு ஊராட் சியில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய மிதிவண்டி நிறுத்தம் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் பெரிதும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.
பயணிகள் நிழலகம்
கீழையூர் ஊராட்சி ஒன்றியம், திருவாய்மூர் ஊராட்சி சீராவட்டம் கிரா மத்தில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழலகம் திறந்து வைக்கப் பட்டது.
திருவாய்மூர் ஊராட்சி 6 வார்டு களை உள்ளடக்கியது. இவ்வூராட்சி யில் 2,340 மக்கள் வசித்து வருகின்ற னர். திருவாய்மூர் ஊராட்சி சீராவட்டம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பயணிகள் நிழலகம் புகழ்பெற்ற எட்டுக்குடி முருகன் கோவில் சென்று வரும் பக்தர்களுக்கு உதவும் வகையி லும், மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் பருவமழை காலங்களில் பேருந்துக்கு காத்திருப்பதற்கு பெரிதும் பயன்பெறும் வகையில் அமைந் துள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ். மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌத மன், வேளாங்கண்ணி பேரூராட்சி துணை தலைவர் ஆ.தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றிய குழுத்தலை வர் ஞா.செல்வராணி ஞானசேகரன், கீழையூர் மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் இ.கௌசல்யா இளம்பருதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெ.ருபன் சங்கர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.