நாகப்பட்டினம், டிச.24 - கீழவெண்மணி தியாகிகளின் 56 ஆவது நினைவு திணத்தையொட்டி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் மிக பிரம்மாண்ட மான பேரணி நடைபெற்றது.
கீழ்வேளூர் அரசமரத்தடி பேருந்து நிறுத்தத்தில் உள்ள பெரியார் சிலைக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் அரவிந்தசாமி, மாநிலத் தலைவர் சம்சீர் அகமது ஆகியோர் மாலை அணி வித்து பேரணியை துவக்கி வைத்தனர். பேரணியானது, கீழ்வேளூர் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வந்து, வெண்மணி கருத்தரங்க மண்டபத்திற்கு வந்தடைந்தது.
கருத்தரங்கம்
இந்திய மாணவர் சங்கம் சார்பில் கீழ்வேளூர் அர்ச்சனா மஹாலில் நடந்த கருத்தரங்கிற்கு வாலிபர் சங்க மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது தலைமை வகித்தார். இந்த கருத்தரங்கத்தில் “நவீன தொழிலாளர் சட்டமும் தொழிற் சங்க போராட்டமும்” என்ற தலைப்பில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரரா சன் கருத்தரையாற்றினார். “கீழத் தஞ்சை யும் வெண்மணி வரலாறும்” என்ற தலைப் பில் மாநில முன்னாள் துனைத் தலைவர் பி.சீனிவாசன் கருத்துரையாற்றினார்.
உயர் கல்வி மீதான தாக்குதல் குறித்து மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பேசினர். நாகை மாவட்டச் செயலாளர் எம்.முகேஷ் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் மு.ஜோதிபாசு நன்றி யுரை ஆற்றினார்.