நாகப்பட்டினம், டிச.28- கீழ்வேளூர் தொகுதியில், சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு செய்தது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி பங்கேற்றார். நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ் வரம் ஊராட்சியில் சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந் தகை தலைமையில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. வேளாண்துறை சார்பில் விவ சாய பெருமக்களுக்கு மானியத்தில் பண்ணை வேளாண் கருவிகள், தென்னங் கன்றுகள், மாற்றுப் பயிர்களுக்கான விதை கள், உரங்கள் வழங்கப்பட்டன. விவசாயி களுக்கு ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செய்முறை விளக்கத்தை சட்ட மன்ற ஆய்வு குழு மேற்பார்வையிட்டு விவ ரங்களை கேட்டறிந்தனர். நிகழ்வில், மாவட்ட ஊராட்சி குழு உறுப் பினர் கௌசல்யா இளம்பருதி, ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேக ரன், திருப்பூண்டிக் கிழக்கு காமேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா கணே சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இக்குழு, ஆசியாவிலேயே மிகப் பெரிய இரண்டாவது தானிய சேமிப்புக் கிடங்கான கோவில்பத்து ஊராட்சியில் உள்ள சேமிப்புக் கிடங்கை ஆய்வு செய்தது. இதனைத் தொடர்ந்து ஆற்காட்டுதுறை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு அலை தடுப்புச் சுவர், வலை பின்னும் கூடம் ஆகியவற்றை பார்வை யிட்டனர். அகஸ்தியம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினை வுத்தூணை பார்வையிட்டனர். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர கத்தில் நடைபெற்ற விழாவில், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி, சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வ பெருந் தகை, பூண்டி.கலைவாணன், ஜவா ஹிருல்லா, சிந்தனைச் செல்வன், சட்டமன்ற செயலாளர் சீனிவாசன், நாகை மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ் ஆகி யோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினர்.