districts

img

எட்டுக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்திற்கு நாகைமாலி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

நாகப்பட்டினம்,  செப்.5 -  எட்டுக்குடி ஊராட்சியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டி டத்திற்கு வி.பி.நாகைமாலி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.  நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வே ளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட எட்டுக் குடி ஊராட்சியில் திருக்குவளை அர சினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல் பட்டு வருகிறது. இந்த அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பல்வேறு கிரா மங்களில் இருந்து வரும் மாணவர் களுக்கு பயன் தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது.  இந்த வளாகத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான கட்டிடப் பணி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. தொழிலாளர் நலன் மற்றும் திறன்  மேம்பாட்டு துறை சார்பில் ரூ.373 லட்சத்தில் இயந்திரவியல் பணிமனை கள், வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங் கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப் பட்டது. இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, புதிய  கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்லை  நாட்டினார். பொதுப் பணித்துறை சார்ந்த  அதிகாரிகள், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.