districts

img

மின் கட்டண உயர்வு ரத்து கோரி சிபிஎம் போராட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 25 - மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும். மாதம் ஒருமுறை மின்சார அளவை கணக்கீடு செய்ய வேண்டும். எரிபொ ருளையும், மின்சாரத்தையும் தனியாரிடம் அதிக  விலை கொடுத்து வாங்குவதை கைவிட வேண்டும்.  மின்வாரியத்தின் வீண் செலவுகளை குறைக்க வேண்டும். சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் வியாழனன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மேலக்கோட்டை வாசலில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.முருகையன் கண்டன உரையாற்றினார். நாகை நகர செயலாளர் க.வெங்கடேசன், நாகை  தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். 

கீழ்வேளூர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றினார். கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம். அபுபக்கர் தலைமை வகித்தார்.

திருக்குவளை மின்சார வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் வி.சுப்பிரமணியன் கண்டன உரை யாற்றினார். கீழ்வேளூரில் தெற்கு ஒன்றியச் செயலா ளர் ஆர்.முத்தையன், தலைஞாயிறில் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். வேதாரண்யம் ஒன்றியம் காரியாபட்டினம் மின்சார வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வேதாரண்யம் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வெற்றியழகன் கண்டன உரை யாற்றினார். 

வேதாரண்யம்

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு மற்றும் கரியாப்பட்டினம் மின்சார துறை அலுவலகம் முன்பு கட்சியின் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் வி.அம்பிகாபதி, ஏ. வெற்றியழகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. சிம்சன், ஜி.கலைச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் கண்டன உரையாற்றினர். 

சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே ஒன்றியச் செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி.மார்க்ஸ், ஒன்றியக் குழு உறுப் பினர்கள் செல்லப்பன், வழக்கறிஞர் ஞானபிரகா சம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

திருச்சிராப்பள்ளி

திருச்சி மாவட்டம் மேற்கு பகுதி குழு சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அகமது தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் சீனி வாசன், மூத்த தோழர் சம்பத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

மலைக்கோட்டை பகுதி குழு சார்பில் கீரைக் கடை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலைக் கோட்டை பகுதி செயலாளர் லெனின் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கரா ஜன் மற்றும் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

திருவாரூர்

திருவாரூர் ஒன்றியம் மாவூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச்  செயலாளர் என்.இடும்பையன் தலைமை வகித்தார்.  மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கோரிக் கைகளை விளக்கி உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சியின் நகரக் குழு சார்பாக பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த  ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் எம்.தர்ம லிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர்.

கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கண்டன உரையாற்றி னார். நன்னிலம் பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச்  செயலாளர் கே.எம்.லிங்கம், பேரளம் நகரச் செய லாளர் சீனி.ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் கண்டன உரையாற்றினார்.

குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.கோபிநாத், நகரச் செய லாளர் டி.ஜி.சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார். வலங்கைமான் ஒன்றி யம் ஆலங்குடி கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என். இராதா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் வி.எஸ். கலியபெருமாள், தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, துணைச் செயலாளர் கே.சுப்பிரமணியன் ஆகியோர்  கண்டன உரையாற்றினர்.

நீடாமங்கலம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.ஜான் கென்னடி தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.கந்தசாமி கண்டன உரையாற்றி னார். மன்னார்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன், ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.முருகையன் கண்டன உரையாற்றினார். திருத்துறைப்பூண்டி தாலுகாவிற்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், நகரச் செயலாளர் கே.கோபு ஆகியோர்  தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.ஜோதிபாசு கண்டன உரையாற்றினார். திருத் துறைப்பூண்டி வடக்கு ஒன்றியத்தில் வி.டி.கதிரேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.தமிழ்மணி கண்டன உரையாற்றினார்.

கோட்டூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எல்.சண்முகவேல் தலைமை  வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.  முருகானந்தன் கண்டன உரையாற்றினார். முத்துப் பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி, நகரச்  செயலாளர் சி.செல்லத்துரை ஆகியோர் தலைமை வகித்து கண்டன உரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகரச் செயலா ளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண் முகம், மாவட்டச் செயலர் சின்னை.பாண்டியன் கண்டன உரையாற்றினர்.

 திருவையாறு ஒன்றியம் கண்டியூர் கடைவீதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியச் செய லாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் கே.பக்கிரி சாமி கண்டன உரை யாற்றினார். அம்மாபேட்டை மின்வாரிய அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் வி.மயில்வாகனன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.முனியாண்டி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன் கண்டன உரையாற்றினர். 
 

மதுக்கூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச் செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனி வேலு, மூத்த தோழர் ஆர்.காசிநாதன் கண்டன உரை யாற்றினர்.  பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில், செங்கிப்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி கண்டன உரையாற் றினார்.

மோகனூர் வடக்கு ஒன்றியம் திருக்காட்டுப் பள்ளி காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் கே.பக்கிரிசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.காந்தி, பி.கலைச்செல்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர். திருவோணம் ஒன்றியம் பூரணிபுரம் கடைவீதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் எஸ்.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு,  மாவட்டக் குழு உறுப்பினர் கே.ராமசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பேராவூரணி, சேது பாவாசத்திரம் ஒன்றியங்களின் சார்பில், பேராவூ ரணி பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு, பேராவூரணி ஒன்றியச் செயலாளர் வே. ரெங்கசாமி, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா ளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு, மூத்த தோழர்  வீ.கருப்பையா கண்டன உரையாற்றினர்.  பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம் கண்டன உரையாற்றினார். 

கும்பகோணம்

கும்பகோணம் கடலங்குடி தெருவில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன்பு மாநகரச் செயலாளர்  செந்தில்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி, மாமன்ற உறுப்பினர் செல்வம், மாநகரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

புதுக்கோட்டை 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர்  உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். விராலி மலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச்  செயலாளர் என்.மகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்.

ஆலங்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எல். வடிவேல், கிழக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.மணி வண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சுசிலா, எஸ்.பாண்டிச்செல்வி, ஆ. குமாரவேல், நகரச் செயலாளர் ஏ.ஆர்.பால சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர்.

கறம்பக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.வீரமுத்து தலைமை வகித்தார். தெற்கு ஒன்றியச் செயலளார் ஆர்.சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், த.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம். பாலசுந்தரமூர்த்தி, துரை.அரிபாஸ்கர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

அறந்தாங்கி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் நாராயணமூர்த்தி தலைமை வைத்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் துவக்கி வைத்து பேசினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கண்டன உரையாற்றினார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் நான்கு ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செய லாளர் பரமசிவம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் கண்டன உரையாற்றினார். 

மேற்கண்ட ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் மாவட்டக் குழு, ஒன்றிய, நகரக் குழு உறுப்பி னர்கள் மற்றும் வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.