districts

img

நாகையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: கீழ்வேளூர் எம்எல்ஏ நாகைமாலி பங்கேற்பு

நாகப்பட்டினம், அக்.7- நாகப்பட்டினம் மாவட்டத் தில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமூக வளைகாப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில்  கீழ்வேளூர் சட்டமன்ற உறுப் பினர் வி.பி.நாகைமாலி கலந்துகொண்டு கர்ப்பிணித்  தாய்மார்களை வாழ்த்தி ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.  நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம்  கீழையூர் ஒன்றியம் வேளாங் கண்ணியில் ஒருங்கிணைந்த  குழந்தை நல வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் நூற்றுக் கும் மேற்பட்ட தாய்மார்க ளுக்கு சமுதாய வளை காப்பு போடும் நிகழ்ச்சி நடை பெற்றது. குழந்தை இறப்பு  விகிதத்தை குறைப்பதற்காக வும், அதே சமயம் கருவுற்ற  தாய்மார்கள் ஆரோக்கிய மாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சிக்கு வந்திருந்த  அனைத்து தாய்மார்களுக் கும் சந்தனம் பூசி, மாலை  அணிவித்து, வெற்றிலை பாக்குடன் ஆரத்தி எடுத்து  வளையல் அணிவிக்கப்பட் டது. பின்னர் பழங்கள்,  ஊட்டச்சத்துப் பொருட்கள், சீர்வரிசை சாமான்கள் கொண்ட தாம்பூழத்தட்டு அனைவருக்கும் வழங்கப் பட்டது. கர்ப்ப காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய செயல்பாடுகள் குறித்து விளக்க கையேடு கொடுக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் ‘வம்சம்’ என்ற வழிகாட்டு மையம் நடைமுறைப்படு த்தப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணி தாய்மார்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனை முதல் எல்லா விதமான உதவிகளையும் 94423 74310 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம். பின்னர் வளைகாப்பு நிகழ்வுகளுக்கென தயார் செய்யப்படுகின்ற ஐந்து வகையான உணவுகளை மாவட்ட ஆட்சியர் மருத்து வர் அருண் தம்புராஜ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் தாய்மார் களுக்கு பரிமாறினர்.