கரூர், செப்.13 - சிஐடியு கரூர் மாவட்ட 9-வது மாநாடு கரூ ரில் 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளான திங்கள்கிழமை மாலை பேரணி, பொதுக் கூட்டம் நடைபெற்றது. கரூர் பேருந்து நிலை யம் காமராஜர் சிலை ரவுண்டனாவில் இருந்து தொடங்கிய பேரணி, உழவர் சந்தை வழி யாக பொதுக்கூட்டம் நடக்கும் லைட் ஹவுஸ் கார்னரில் நிறைவடைந்தது. தோழர் து.ரா.பெரியதம்பி திடலில் (லைட் ஹவுஸ் கார்னரில்) நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நாகைமாலி சிறப்பு ரையாற்றினார். சிஐடியு மாநில துணைத்தலைவர் பால கிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் ஆறு முகம், மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, கட்சி யின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் ஆகியோர் பேசினர். வரவேற்பு குழு தலை வர் எம்.தண்டபாணி, செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ஹோச்சுமின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.