நாகப்பட்டினம் அக்.17 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஹைதரா பாத் மத்திய உணவுக் கழகத்தின் சேமிப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆய்வு மைய குழுவினர் ஆய்வு செய்த னர். இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கை களை முன்வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வே ளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வலி வலம், எட்டுக்குடி, பட்டமங்கலம், வெண் மணி, திருக்குவளை ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய உணவுக் கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக் கட்டுப்பாட்டு மைய துறை குழுவினர் ஆய்வு செய்தனர். தற்போது தொடர் மழை பெய்வ தால், குறுவை நெல் மணிகளின் ஈரப்ப தம் அதிகரித்துள்ளது. இதனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் இடமிருந்து, நெல்லை வாங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்த னர். இக்கோரிக்கையை சட்டமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் முன் வைத்தனர். இதனை தமிழக அரசின் கவனத்திற்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி கொண்டு சென்றார். இதனை ஏற்று தமிழக அரசு மத்திய உணவுக் கழ கத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு தர கட்டுப்பாட்டு மையத்திற்கு பரிந்துரை செய்தது. இதனையடுத்து மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு தர கட்டுப்பாட்டு மைய துணை இயக்கு னர் எம்.இசட்.கான் தலைமையிலான குழுவினர், டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங் களில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்பு ராஜ், விவசாய சங்கங்களின் பிரதிநிதி கள் இருந்தனர்.
கண்காட்சி
பின்னர் சிக்கல் ஊராட்சியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ளூர் பாரம்பரிய நெல் ரகங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. பாரம்பரிய நெல் ரகங்களின் விதை களை உற்பத்தி செய்ய நெல் ஜெய ராமன் மரபுசார் நெல் ரகங்கள் இயக்கத் தின் கீழ் மரபுசார் நெல் ரகங்கள் கண்காட் சிக்கு வைக்கப்பட்டன. பாரம்பரிய நெல் ரகமான தூயமல்லி, கருப்புகவுனி ஆகிய விதைகள் நாகப்பட்டினத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலமாக விவசாயி களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ், மீன் வளர்ச்சி கழக தலை வர் என்.கவுதமன், ஆதிதிராவிட நலத் துறை தலைவர் உ.மதிவாணன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.