districts

img

தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் கடைப்பிடிப்பு

தருமபுரி, செப்.30- முதுபெரும் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் தருமபுரியில் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது.  கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தை முன்னிட்டு, அரூரில் விவசாய தொழிலாளர் சங்க கொடியை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் டி. செல்லக்கண்ணு ஏற்றினார். அதனை தொடர்ந்து அரூர்  கட்சி அலுவலகத்தில் தோழர் பி.சீனிவாசராவ் உருவப் படத்துக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.  இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப் பினர் சோ.அருச்சுணன், ஒன்றிய செயலாளர் பி.குமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் எம். முத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர்  வழக்கறிஞர் டி.மாதையன், மாவட்டத் தலைவர் பி.ஜெய ராமன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று, தருமபுரி முத்து இல்லத்தில் தோழர் பி. சீனிவாசராவ்  உருவப்படத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள்  சங்க ஒன்றிய செயலாளர் பி.ரவி தலைமையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.கந்த சாமி, சிஐடியு நிர்வாகி ஜி.வெங்கட்ராமன் உள்ளிட் டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.