districts

img

புதிய கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி: நாகைமாலி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம், செப்.24 - புதிய கடற்கரையில் நடைபெற்று வரும்  பீச் வாலிபால் விளையாட்டு போட்டிகளை நாகைமாலி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.  நாகப்பட்டினம் மாவட்டம் புதிய கடற் கரையில் மாநில அளவிலான ஆடவர் மற்றும்  பெண்களுக்கான பீச் வாலிபால் போட்டி யும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக் கான (யூ17) பீச் வாலிபால் போட்டியும் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி 25 ஆம்  தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகள் கடற்கரையில் நடப்ப தால், ஏராளமான விளையாட்டு ஆர்வலர் கள் வந்து போட்டியை பார்க்கின்றனர். இரவு  முழுவதும் நடப்பதாலும், மாநிலம் முழுவது மான விளையாட்டு அணிகள் பங்கேற்பதா லும் கூடுதல் கவனம் பெற்று பொதுமக்க ளும் பங்கேற்கின்றனர். 18 வயதிற்கு கீழான பள்ளி மற்றும் கல்லூரி  மாணவ-மாணவியர்களுக்கும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இளம் விளையாட்டு வீரர்கள் உற்சாகத்துடன் விளையாடி வரு கின்றனர். நாகப்பட்டினத்தில் ஆண்டுதோ றும் நடைபெறும் பீச் வாலிபால் போட்டி கடந்த வருடங்களில் பெருந்தொற்று காரண மாக தடைபட்டு இருந்தாலும் இந்தாண்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவில் நடைபெறும் விளை யாட்டு விழாக்களில் ஒன்றாக கருதப்படும் பீச்  வாலிபால் போட்டியை, கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி தொடங்கி  வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். இதில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர்  கலந்து கொண்டார்.