districts

img

புதிய மின்மாற்றியை நாகைமாலி எம்எல்ஏ செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்

நாகப்பட்டினம், அக்.5 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வே ளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட திருப் பூண்டி ஊராட்சி காரைநகர் பகுதியில் புதிய மின்மாற்றி சேவையை வி.பி.நாகைமாலி எம்எல்ஏ செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதில் அப்பகுதி பொதுமக்கள், மின்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கீழ்வேளூர் ஒன்றியம் வடகரை, திருக்கண்ணங்குடி, எர வாஞ்சேரி ஆகிய ஊராட்சிகளில் மக்கள்  சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய  கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பின ரிடம் தெரிவித்தனர்.  சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினரும்,  வடகரை ஊராட்சி மன்ற தலைவரு மான எஸ்.பாண்டியன், திருக்கண்ணங் குடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வ மணி, எரவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.