நாகப்பட்டினம் செப்.2 - கீழ்வேளூரில் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன. கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு புறநோயாளிகள் மற்றும் உள்நோ யாளிகள் பிரிவு கட்டிடமும், வாய்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சத் தில் புதிதாக கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டடமும், பாலக்குறிச்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையமும் திறந்து வைக்கப்பட்டது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், நாகை மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ், தாட்கோ தலைவர் உ.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.