districts

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியது!

மேட்டூர், ஜூலை 27 - மேட்டூர் அணை நீர்மட்டம் 405 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சனிக்கிழமை யன்று காலை 100 அடியைத்தாண்டியது.

நிரம்பி வழியும் கர்நாடக அணை களில் இருந்து விநாடிக்கு 1.32 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமள வென்று உயர்ந்து வருகிறது. இதனால், வெள்ளிக்கிழமை காலை 92.62 அடி யாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 100 அடி யாக உயர்ந்தது. ஒரே நாளில் மேட்டூர்  அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. அத்துடன், மாலையே 101.7 அடியாக உயர்ந்தது.

இதன்மூலம் வரலாற்றில் 71-ஆவது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம்  100 அடியாக உயர்ந்துள்ளது. அத்துடன்,  கடந்த 405 நாட்களுக்குப் பிறகு, மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியைத் தொட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரியாற்றில் விநோ டிக்கு 1.30 லட்சம் கன அடியும், மேட்டூர்  அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 18  ஆயிரம் கன அடியும் நீர்வரத்து உள்ள தால், ஓரிரு நாளில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.