districts

img

90 ஆண்டுகளை கடந்தது மேட்டூர் அணை!

மேட்டூர், ஆக. 22 - தமிழகத்தின் முக்கியமான பாசன ஆதாரமான மேட்டூர் அணை 90 ஆண்டுகளை நிறைவு செய்து, புதன்கிழமை (ஆக.21) அன்று 91-வது ஆண்டில் அடி எடுத்து வைத்தது. ஆங்கிலேய அரசு, 1925-ஆம் ஆண்டு மேட்டூரில் அணை கட்டுமானத்தை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு இன்ஜினியரான கர்னல் எல்லீஸ் தலைமையில் துவங்கியது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு 1934-ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று மேட்டூர் அணை கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்தன.  ரூ. 4.80 கோடி செலவிடப்பட்டது. தொடர்ந்து 1934-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி அப்போதைய ஆங்கிலேய ஆட்சியில் சென்னை ஆளுநராக இருந்த ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி அணையைத் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.