மேட்டூர், ஜூலை 30- தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காத மேட்டூர் நக ராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிஐ டியு சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு 2021 ஜூன்மாத ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படாத தால் தூய்மை பணியாளர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்ற னர். எனவே, தூய்மை பணியாளர்க ளுக்கான ஜூன் மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். தொழிலா ளர் ஊதியத்தில் பிடித்தம் செய்தும், சொசைட்டியில் செலுத்தாமல் உள்ள கடன் தொகையை சொசைட்டியில் செலுத்த வேண்டும். சேமநலநிதி, சிறப்பு சேமநலநிதிக்கான கணக்கு சீட்டு வழங்க வேண்டும். அரசு ஆணைப்படி கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
ஒப் பந்தபிரிவு தூய்மைப் பணியாளர்க ளுக்கு வாரவிடுமுறை, தேசிய விடு முறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வெள்ளியன்று மேட்டூர் நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதில், சிஐடியு மாவட்ட நிர்வாகி சி.கருப்பண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், ஆகஸ்ட் 1 ஆம் தேதிக் குள் ஊதியம் வழங்க வேண்டும். அவ் வாறு ஊதியம் வழங்காத பட்சத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள் ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித் தனர்.