மேட்டுபாளையம், ஜூலை 19- ரயில்வே மேம்பாடு குறித்து ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனிடம் சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தி னர் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் உள்ள ரயில் நிலையத் தில், வெள்ளியன்று தூத்துக்குடி வாராந் திர ரயில் மேட்டுப்பாளையம் போத்த னூர் புதிய ரயில்கள் சேவை துவக்கம் ஆகிய நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனிடம், மேட்டுப்பாளையம் தாலுகா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். இதில், மேட்டுப்பாளையம் கோவை ரயில்வே பாதையை இரு வழிப்பாதையாக அமைக்க வேண்டும். மேட்டுப்பாளையம் கோவை பாசஞ்சர் ரயிலை மேலும் இரண்டு முறை நீட் டிக்க வேண்டும். மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து கேரளா உள் ளிட்ட வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கம் வேண்டும். திருநெல்வேலி தூத்துக்குடி ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும். இரவு நேரங்களி லும் மேட்டுப்பாளையம் ரயில் நிலை யம் செயல்படும் வகையில் கூடுதல் ரயில் சேவைகளை மேட்டுப்பாளையத் தில் இருந்து செயல்படுத்த வேண்டும். மேட்டுப்பாளையம் - கோவை பாசஞ் சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் தற்போது மேட் டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய சீரமைப்புப் பணியை விரை வுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
இந்த மனு அளிக்கும் நிகழ்வில், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் சம்சு தீன், சித்திக், ரங்கநாதன், ஹபிபுல்லா, மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.