மேட்டுப்பாளையம், ஜன.10- மலைவாழ் மக்கள் சங் கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் மேட்டுப்பாளையத்தில் நடை பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். இவரின் மறைவு தகவலறிந்து, விவ சாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் உள் ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர், பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட அமைப்பு செயலாளர், சிபிஎம் மேட்டுப் பாளையம் தாலுகா குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட களப்பணியாற்றியவர் தோழர் சந்திரசேகரன் (54). மலைவாழ் மக்கள் சங் கத்தை கட்டியமைத்திட, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட பல்வேறு மலை கிராமங்களில் உள்ள பகுதிகளுக்கு நேரிடையாக சென்று சங்கத்தை வலுப் படுத்துவதில் முன்னணியில் நின்றார்.
இதேபோன்று, தான் பணியாற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் ஊழியர் நலன் காக்கும் போராட்டத் தில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அமைப்பு செய லாளராக வர்க்க கடமையாற் றினார். இந்நிலையில், செவ் வாயன்று சாலை விபத்தில் ஒன்றில் சிக்கி அகால மரண மடைந்தார்.
தோழர் சந்திரசேகரனின் மறைவு தகவலறிந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாநில தலைவரு மான பெ.சண்முகம், தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தின் மாநிலத்தலைவர் பி. டில்லிபாபு, மாநிலச் செயலா ளர் இரா.சரவணன், மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் மற்றும் செயற் குழு உறுப்பினர்கள், தாலுகா செயலாளர் எம்.கனகராஜ், பிஎஸ்என்எல் ஊழியர் சங் கத்தின் மாநிலத் தலைவர் பாபு ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் மகேஷ் உள்ளிட்ட சங்கங்க ளின் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி னர். புதனன்று மேட்டுப்பாளை யத்தில் அவரின் இறுதி நல்ல டக்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் இரங்கல்
தோழர் சந்திரசேகரன் மறைவையொட்டி தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தின் மாநில செயலாளர் இரா.சரவணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரி வித்திருப்பதாவது: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர்.
பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலா ளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேட்டுப்பாளை யம் இடைக்கமிட்டி உறுப்பி னர் என பல்வேறு பொறுப்பு களில் செயல்பட்ட அருமை தோழர் சந்திரசேகரன் 9 ஆம் தேதி விடியற்காலை ஒரு மணிக்கு சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத் துத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தை உரு வாக்குவதில் முக்கிய பங் காற்றியவர் புலிகள் சரணா லயம் அமைப்பதில், பழங்குடி மக்களின் பாதிப்புகளை பொள்ளாச்சியில் நடத்திய போராட்டமும், கோவையில் ஈஷா ஆக்கிரமிப்பு நடத்திய போராட்டத்திலும் முக்கிய பங்கு ஆற்றியவர் தோழர் சந்திரசேகர்.
அவருடைய அகால மரணம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாநில குழுவின் சார் பில் வீரவணக்கம் செலுத்து கிறேன். அவருடைய துணை வியார். மகன், மகள் ஆகியோ ருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.