districts

img

மந்தகதியில் நடக்கும் மேம்பால வேலை

 மலை கிராம மக்கள் அவதி

மே.பாளையம், மார்ச் .1- காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட  பாலப் பணிகளில் கடும் தொய்வு  ஏற்பட்டுள்ளதால், மலைக்கிராம மக்கள் வேதனையடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அடுத்துள்ள சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட லிங்காபு ரம் மற்றும் காந்தவயல் கிராமங்க ளுக்கு இடையே ஓடும் காந்தை யாற்றின் குறுக்கே, ஏற்கனவே 21 அடி உயரம் கொண்ட உயர்மட்ட  பாலம் ஒன்று உள்ளது.  சுமார் பதினைந்து ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த  பாலம், சரியாக கணக்கிடப்படாமல் உயரம் குறைவாக கட்டப்பட்டது.

இதனால், ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் பவானி ஆற்றில்  வெள்ளம் ஏற்படும் போது, இப்பா லம் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கி விடுகிறது. அவ்வாறு முழ்கும் போது, காந்தவயல், காந்தையூர், லிங்காபு ரம், உளியூர், ஆளூர் உள்ளிட்ட கிரா மங்களில் வசிக்கும் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான போக்குவரத்து வசதி துண்டிக்கப் படும். அதுமட்டுமின்றி, காந்தை யாற்றை கடந்து மறுகரையை அடைய ஆபத்தான பரிசல் பயணத் தையே நம்பியிருக்கும் சூழல் உருவாகும்.  

இந்த நிலையில், பாலத்திற்கு மாற்றாக, வெள்ளப்பெருக்கு காலங்களில் நீரில் மூழ்காத உய ரத்திற்கு, புதிய பாலம் கட்ட வேண் டும் என இப்பகுதி மக்கள் அர சுக்கு கோரிக்கை விடுத்து வந்த னர். இதனை ஏற்ற தமிழ்நாடு அர சாங்கம் புதிய பாலம் கட்ட 14  கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அறிவித் தது. இதனைத்தொடர்ந்து, கடந் தாண்டு துவக்கத்தில் புதிய பாலம்  அமைக்கும் பணிகள் துவங்கின. இப்புதிய பாலம் 53 அடி உயரத் தில், 168 மீட்டர் நீளம் மற்றும்  10 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும் எனவும், காந்தை யாற்றின் நடுவே ஆறு பில்லர் களை கொண்டு இந்த உயர் மட்ட பாலம் கட்டப்பட உள்ளதாகவும் இவ்வாண்டு இறுதிக்குள் இப்பா லப்பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இப்பாலப் பணிகள் துவங்கியது முதலே மிகவும் மந்த  கதியில் நடக்கிறது. இதுவரை இரண்டு பில்லர்கள் மட்டுமே கட்டப் பட்டுள்ளதாக தெரிவிக்கும் இப்ப குதி மக்கள், கடந்த ஒரு மாதமாக பணிகள் முற்றிலுமாக முடங்கியே இருந்தது. இதனிடையே, எதிர்ப்பு  கிளம்பியதால் தற்போது பெய ரளவுக்கு மட்டுமே பாலப்பணி களை செய்து வருகின்றனர்.  வரும் ஜுன் மாதத்திற்குள் பாலப்பணிகளை முடிக்காவிட் டால், பருவ மழை துவங்கி மீண்டும்  பழைய பாலம் மற்றும் புதிய பாலம்  கட்டப்படும் இடங்கள் என இப்பகு தியே வெள்ளத்தில் மூழ்கி விடும்  அபாய நிலை உள்ளது.

இதனால்,  மலைக்கிராம மக்கள், மாணவ மாணவியர், பெண்கள், முதியோர்,  விவசாயிகள் என அனைவரும் காட்டாற்றை கடக்க மிக ஆபத்தான  பரிசல் பயணத்தையே நம்பியி ருக்க வேண்டும். பணியாட்கள் வர வில்லை, சரியான முறையில் பணியை தொடரும் வகையில் பணம் ஒதுக்கீடு செய்யவில்லை என ஒப்பந்ததாரர் தரப்பில் கூறப் படுகிறது. எனவே, அரசு இவ்விவகாரத் தில் தீவிர கவனம் செலுத்தி பாலப் பணிகளில் உள்ள பிரச்சனைக ளுக்கு தீர்வு கண்டு பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்பதே  இப்பகுதி மக்களின் கோரிக்கை யாக உள்ளது.