மேட்டுப்பாளையம், அக்.22- பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஞாயிறன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநகராட்சிக்கு குடி நீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணையிலிருந்து குடிநீர் வழங்க பில்லூர் 3ஆவது கூட்டுக்குடிநீர் திட்டம் 2035ஆம் ஆண்டு கோவை மாநகராட்சியிலுள்ள மக்கள் தொகையை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத் திற்கு ரூ.779 கோடி மதிப்பில் மேட்டுப்பாளையம், நெல்லித் துறை ஊராட்சி, முருகையன் திட்டம் பரிசல்துறை. மருதூர் ஊராட்சி. தண்டிப்பெருமாள்புரம் மற்றும் கட்டன்மலை ஆகிய இடங் களில் கட்டுமான பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வரு கின்றன. மேட்டுப்பாளையம் வட்டம், நெல்லித்துறை ஊராட்சி, முரு கையன் பரிசல்துறை பகுதியில் ரூ.134 கோடி மதிப்பீட்டில் தலைமை நீரேற்று நிலைய கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டு, பணி களை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் களுக்கு அறிவுறுத்தினார். மேலும், திருப்பூர் மாநகராட்சியின் 4ஆவது கூட்டு குடிநீர், திட்ட நீரேற்று நிலைய தடுப்பணை கட்டுமான பணி மற்றும் நீர்பின்னேற்றம் தடுப்பு கட்டுப்பாட்டு குழாய் அமைக்கும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். முன்னதாக, மேட்டுப்பாளை யம் நகராட்சியில் மேற்கொள்ளப் பட்டுவரும் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் நகராட்சி யில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலு வலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு அரசு தலைமைச் செய லாளர் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில், பாதாளச் சாக் கடை திட்டப்பணிகள் எவ்வளவு கி.மீ தூரத்திற்கு நடைபெறுகிறது, எத்தனை குழாய்கள் பாதிக்கப் பட்டுள்ளன. பணிகள் எந்தளவிற்கு முடிவுற்றுள்ளன?. மீதமுள்ள பணி கள் என்ன என்பது குறித்து சம் பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்ததுடன், பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். நடை பெற்றுவரும் பணிகள், மேற்கொள் ளப்படவுள்ள திட்டப்பணிகள் குறித்த திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அலுவலர் களுக்கு தமிழ்நாடு அரசு தலை மைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணை யாளர் மா.சிவகுரு பிரபாகரன், திருப்பூர் மாநகராட்சி ஆணை யாளர் பவன்குமார் ஜி.கிரியப்ப னவர், குடிநீர் வடிகால் வாரிய மண்டல தலைமை பொறியாளர் செல்லமுத்து, மண்டல இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்) மா.இளங் கோவன், மேட்டுப்பாளையம் நகர்மன்றத் தலைவர் மெஹரி பாபர்வின் அசரப் அலி, துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் இரா.அமுதா ஆகியோர் உடனிருந்தனர்.