மே.பாளையம், செப்.12- அரசு வனக்கல்லூரியில் பட்டுப்புழுவியல் துறைக் கான மாணவர் சேர்க்கை வழக்கம்போல் நடைபெ றும் என உறுதியளிக்கப்பட்ட தால் மாணவர் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தில் பட்டுப்புழு வியல் துறை பட்டப்படிப்பு 2011 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
பின்னர் 2014 ஆம் ஆண்டில் இத்துறை இப்பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் மேட்டுப்பாளை யம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந் நிலையில், 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இளநிலை அறிவி யல் (B.sc sericulture) படிப்பான பட்டுப் புழுவியல் படிப்பு இடம்பெறவில்லை. இத னால் தங்களின் எதிர்க்காலம் குறித்த கேள்விக் குறியோடு இத்துறையின் கீழ் பயிலும் மாணவ, மாணவிகள் கடந்த ஆக.8 ஆம் தேதி முதல் கல்லூரி வளாகத்தினுள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகி கள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடித்தது. இதையடுத்து பட்டுப் புழுவியல் துறைக்கு மட்டும் சனியன்று மாலை முதல் காலவரையற்ற விடுமுறை அளிக்கப் படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. மேலும், இத்துறை மாணவ, மாணவிகள் தங்கி யிருந்த விடுதி அறைகளை காலி செய்து விட்டு உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேற உத்தரவிட்டது. ஆனால், கல்லூரியை விட்டு வெளியேற மறுத்த மாணவர்கள் தங்களது தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.
இத னால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் பல்கலைக்கழகம் சார்பில் செவ்வாயன்று மாணவர்களுடன் நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையில் நடப்பாண்டு பட்டுப் புழுவியல் துறையில் வழக்கம் போல் மாண வர் சேர்க்கை தொடங்கப்படும் என உறுதி யளிக்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவி கள் மகிழ்ச்சி அடைத்தனர். இதையடுத்து போராட்டத்தை திரும்பப் பெறுவதாக மாண வர்கள் அறிவித்தனர்.