districts

img

கவிஞர் மாயூரம் வேதநாயகனார் நினைவரங்க பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

மயிலாடுதுறை, டிச.10-  மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட ஆரோக்கியநாதபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மாயூரம்  வேதநாயகனாருக்கு  நினைவரங்கம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  நேரில் பார்வையிட்டு கட்டுமானப் பணி களை ஆய்வு செய்தார்.

தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் வேதநாயகனாருக்கு  ரூ.3 கோடி மதிப்பீட்டில்  மயிலாடுதுறை நகராட்சிக் குட்பட்ட ஆரோக்கியநாதபுரத்தில் 884  சதுர மீட்டர் பரப்பளவில் நினைவரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் அரங்கம், உணவுக்கூடம், கூடம், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர்  பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளை தரமானதாக மேற்கொள்ள வேண்டும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தி னார்.

தொடர்ந்து, கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவி களுடன் மாவட்ட ஆட்சியர்  கலந்துரை யாடி, ஒரு மதிப்பெண் மற்றும் இரு மதிப் பெண் வினாக்களை பாடங்கள் வாரியாக கேட்டறிந்தார் பொதுத்தேர்விற்கு முழுமை யாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்வி ஒன்றே மகத்தானது. அதனை திறம்பட கற்று மேன்மேலும் வாழ்க்கை யில் உயர வேண்டும் என மாணவர்களு க்கு மாவட்ட ஆட்சியர்  அறிவுரை வழங்கி னார்.  இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் , பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் பால ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் ராமர், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜய ராணி ஆகியோர் உடனிருந்தனர்.