மயிலாடுதுறை, டிச.24 - மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் த.பே.மா. கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை பொறையார் பெத்லேகம் ஆலய ஆயர் ஜான்சன் மான்சிங் தொடங்கி வைத்தார்.
முதல்வர் முனைவர் ஜான்சன் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் காசாளர் முனைவர் ஜூலியஸ் விஜயகுமார் வரவேற்றார். கல்லூரியின் செயலரும், தாளாளருமான தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயர் முனைவர் கிறிஸ்டியன் சாம்ராஜ் உரையாற்றினார்.
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் செயலர் ஆர்.தங்கப்பழம் மற்றும் ஆலோசனை சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், திருச்சபையின் பல்வேறு துறை சார்ந்த நிர்வாகிகள், கல்லூரியின் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் சமூக அக்கறை கொண்ட நடனம், நாடகம், பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை செய்து காட்டினர்.