districts

img

அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

மயிலாடுதுறை, டிச.6 - சட்ட மாமேதை அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினத்தையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கம், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல்வேறு அமைப் புகளின் சார்பில் பல்வேறு இடங்க ளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மயிலாடுதுறை மாவட்டக் குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொ டர்ந்து அரசு போக்குவரத்து பணி மனை, மேலப்பெரும்பள்ளம், திரு விடைக்கழி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கரின்  நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

தஞ்சாவூர் 

தஞ்சாவூர் அருகே மறியல் கிரா மத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர்  சிலைக்கு, சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.மனோ கரன் உள்ளிட்ட பலர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். இதே போன்று, திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேது பாவாசத்திரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர்  சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

கும்பகோணம்

கும்பகோணம் சிஆர்சி அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு,  சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, நகரச்  செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட  பலர் மரியாதை செலுத்தி உறுதி மொழி ஏற்றனர்.

திருச்சிராப்பள்ளி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரிஸ்டோ ரவுண்டானாவில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திருச்சி மாநகர்  மாவட்டச் செயலாளர் ராஜா தலை மையில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. 

மன்னார்குடி

மன்னார்குடியில் சிபிஎம் சார்பில்  நகரச் செயலாளர் ஜி.தாயுமா னவன், அம்பேத்கர் சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தி னார். ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால், மாதர் சங்க தலைவர்கள் டி.சந்திரா, சகாயராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமுஎகச சார்பில் கிளைத் தலைவர் கே.வி.பாஸ்கரன் மாலை அணிவித்தார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க செய லாளர் அப்துல் ரசாக் மாலை அணி வித்தார். 

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கவிவர்மன், மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர்,  அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணண், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.வசந்தகுமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

கந்தர்வகோட்டை 

கந்தர்வகோட்டையில் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ராமையன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.ரெத்தினவேல், ஒன்றியச் செயலாளர்கள் ஜி.பன்னீர் செல்வம், எஸ்.நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் பழைய பேருந்து  நிலையத்தில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை முன்னணி சார்பில்  அமைப்பின் மாவட்ட செயலாளர் கோகுலகிருஷ்ணன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்பேத் கர் சிலைக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் குறிச்சி  ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் மாநிலக் குழு  உறுப்பினருமான நாகைமாலி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முகேஷ் கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, பகுதிக் குழு, ஒன்றியம் மற்றும் கிளை உறுப்பினர்கள் உட்பட பல்வேறு அர சியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.