மயிலாடுதுறை, டிச.7 - மயிலாடுதுறையில் இயங்கி வரும் டிபிடிஆர் தேசிய மேல் நிலைப் பள்ளியில் தலைமையாசிரி யர் பொறுப்பிற்கு வர வேண்டிய பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியரை தீண்டாமை பாகுபாடு காரணமாக திட்டமிட்டு பள்ளி நிர்வா கம் புறக்கணித்து வருகிறது. இதில், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகார் அளித்து உள்ளது.
மயிலாடுதுறையில் இயங்கி வருகிற தேசிய மேல்நிலைப் பள்ளி யில் கடந்த 18 ஆண்டுகளாக மூத்த முதுகலை ஆசிரியராக இரா.கலை வாணன் என்பவர் பணியாற்றி வரு கிறார். சென்ற கல்வியாண்டி லிருந்து உதவித் தலைமையாசிரி யர் பணியையும் சிறப்பாக செய்து வரும் நிலையில், 2023-24 ஆம் கல்வியாண்டில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து அரசு விதிமுறை களின்படி பணியில் மூத்த முது கலை ஆசிரியர் தலைமையாசிரி யராக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் விதிகளுக்கு மாறாக அரசு விதிமுறைகளை முற்றிலும் மதிக்காமல், 10 ஆண்டுகள்கூட முதுநிலை ஆசிரியர் பணியை பூர்த்தி செய்யாத 8 ஆவது நிலையில் இருக்கும் ஒருவருக்கு தலைமையாசிரியர் (பொறுப்பு) பதவியை பள்ளி நிர்வாகம் வழங்கி யுள்ளது.
பள்ளி நிர்வாகம் கடைப் பிடிக்கும் தீண்டாமை நடவடிக் கையை எதிர்த்து, பல்வேறு தரப்பி னரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் போ ராட்டங்களை நடத்தி மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வித்துறை யிடம் முறையிட்டது.
அதன் பின்னரும் பள்ளி நிர்வா கம் தனது முடிவை மாற்றாமல் இருந்து வருவதோடு தற்போது பள்ளி துவங்கிய 125 ஆவது ஆண்டினை கொண்டாட உள்ள தாகவும், “தாழ்த்தப்பட்ட ஒருவரை தலைமையாசிரியராக நிய மித்து எப்படி விழாவை கொண்டாடு வது பள்ளிக்கு தீட்டுப்பட்டு விடும்” என பள்ளி நிர்வாகம் வெளிப்படையாகவே பேசி வருகிற தாம்.
இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மயிலாடுதுறை மாவட்டக்குழு தமிழ்நாடு முதலமைச்சர், பட்டிய லின ஆணையர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரி களுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளது. இதோடு, மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரிடம் நேரிலும் புகார் நகலை மாவட்டச் செயலாளர் சி.மேகநாதன், மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.விஜய் ஆகியோர் நேரில் வழங்கியுள்ளனர்.
பள்ளி தலைமையாசிரியரே தீண்டாமை பாகுபாட்டால் பாதிக்கப்படும் நிலையை அகற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?