சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை, டிச.9 - மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய ஆய்வா ளர் நாகவள்ளியின் அடாவடித் தனத்தை கண்டித்து பெரம்பூர் கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடை பெற்றது.
பெரம்பூர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட வேலம்புதுக்குடி மாதா கோயில் தெருவைச் சேர்ந்த கைக் குழந்தையுடன் உள்ள இளம் பெண்ணை நியாயத்துக்கு புறம்பாக, இரவு 9 மணிவரை விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் வைத்து பொய் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும், அவரை சிறையில் அடைக்க முற்பட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலையீட்டால் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் சம்பந்தப் பட்ட இளம்பெண் விடுவிக்கப்பட் டார்.
நல்லாடை கிராமத்தில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர் செல்வம் என்பவரை, ஆவிழிக்கரை யில் வசிக்கும் சந்திரகாசன் மகன் அருளரசன் என்ற சமூக விரோதி கத்தி யால் தாக்கியதில், அவர் 20 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவம் நடந்து 2 மாதங்கள் கடந்த நிலையில் சட்டத்திற்கு புறம் பாக ஆய்வாளர் செயல்பட்டு குற்ற வாளியை பாதுகாத்து வருகிறார்.
அதே போன்று, அரசூர் கிராமம் நடுத்தெருவை சார்ந்த செல்வி என்ப வரின் மண்டையை உடைத்த அதே ஊரை சார்ந்த கபிலன் மீது ஒரு மாதத்திற்கும் மேலாகியும் வழக்குப் பதிவு செய்யாமல் குற்றவாளியை காவல் ஆய்வாளர் பாதுகாக்கிறார். கொடைவிளாகம் ஊராட்சி ஆண்டாஞ்சேரி கிராமத்தில் குடும்ப சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில், குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவாக செயல்படாமல் மூன்றாவது நபரி டம் கையூட்டு பெற்றுக்கொண்டு, ஒட்டுமொத்த கிராமத்தின் முடிவு களுக்கு எதிராக அடாவடித்தனமாக ஆய்வாளர் செயல்பட்டு வருகிறார்.
பெரம்பூரில் வட்டிக் கடையில் பணியாற்றி வந்த ஏழை சிறுமி மீது பொய் வழக்கு பதிந்து அவரை யும், குடும்பத்தினரையும் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத் திற்கு 4.12.2024 அன்று காலையில் வர வைத்து இரவு 9.30 மணிவரை கொடு மைப்படுத்தி சிறையில் அடைக்க முயன்றார். இதில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் காவல்துறை உயர் அதிகாரி கள் தலையிட்டதால் சிறைக்கு செல்லாமல் அந்த பெண் காப்பாற்றப் பட்டார்.
இதுபோன்று பல்வேறு சம்ப வங்களில், கஞ்சா மற்றும் கள்ளச் சாராய வியாபாரிகள் போன்ற சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல் பட்டு வரும் பெரம்பூர் காவல் ஆய்வா ளரை கண்டித்து சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரை ராஜ், சி.விஜயகாந்த், ப.மாரியப்பன், ஏ.ரவிச்சந்திரன், டி.சிம்சன், கே.பி. மார்க்ஸ், குத்தாலம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ராமகுரு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள், காவல் ஆய்வாளரின் அடாவடித்தனத் தால் பாதிக்கப்பட்ட மக்கள், பொது மக்கள் கண்டன முழக்கமிட்டனர்.