மயிலாடுதுறை, டிச.11 - கடலோர மீனவர்கள் மற்றும் உள்நாட்டு மீனவ மக்களின் கோரிக்கைகளை வலி யுறுத்தி, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் பேருந்து நிலையம் அருகில் மீன் பிடி தொழிலாளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாக வள்ளி தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்டச் செயலாளர் ஜீவா னந்தம் சிறப்புரையாற்றினார். வழக்கறி ஞர் ஞானபிரகாசம், மாநிலக்குழு உறுப்பி னர்கள் தீபா, வள்ளல், ஜெயமாலா, மகேஸ்வரி, ஜோதிமணி, தேவேந்திரன் ஆகி யோர் உரையாற்றினர்.
குளம், ஏரி அணைகளில் மீன்பாசி குத்த கைகளை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்ளுக்கு வழங்கிட வேண்டும் என உயர்நீதிமன்றம் (21.03.2023) உத்தர விட்டுள்ளது. இதை அமல்படுத்தாதை கண்டித் தும், கடலோர மீனவ மக்களின் வாழ்வாதா ரத்தை சீரழிக்கும் வகையில், ஒன்றிய அரசால் கொண்டு வரப்படும் நீலப்புரட்சி, நீலப் பொருளாதாரம், சாகர் மாலா போன்ற சட்டங்களையும், மீன்பிடி தொழிலில் கார்ப்ப ரேட் கம்பெனிகளை அனுமதிப்பதை எதிர்த்தும், மீன்பிடி மற்றும் விற்பனை தொழி லில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவருக் கும் மீனவ நலத்திட்டங்களை வழங்கக் கோரி யும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.