districts

img

சிபிஎம் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளராக பி.சீனிவாசன் தேர்வு

மயிலாடுதுறை, டிச.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட மாநாடு டிசம்பர் 13, 14 தேதிகளில் நடை பெற்றது. இதில் மாவட்டச்  செயலாளராக பி. சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.

சனிக்கிழமை நடை பெற்ற 2-ஆவது நாள் மாநா ட்டில் பிரதிநிதிகளின் விவா தத்திற்கு பிறகு மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் தொகுப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் நாகைமாலி எம்எல்ஏ, மாநி லக்குழு உறுப்பினர் ஏ.வி.  சிங்காரவேலன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரை யாற்றினர். மூத்த தோழர்கள்  கௌரவிக்கப்பட்டனர்.

புதிய மாவட்டக்குழு தேர்வு

தொடர்ந்து 35 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக பி.  சீனிவாசன் தேர்வு செய்  யப்பட்டார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் களாக ஜி. ஸ்டாலின், எஸ்.  துரைராஜ், ப. மாரியப்பன், டி. சிம்சன், ஏ. ரவிச்சந்திரன், ஜி. வெண்ணிலா, சி. விஜய காந்த், கே.பி. மார்க்ஸ், டி.ஜி.  ரவிச்சந்திரன், அமுல் காஸ்ட்ரோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில செயற்குழு உறுப் பினர் கே. சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார். 

தீர்மானங்கள்

மயிலாடுதுறை மாவட் டத்தில் மருத்துவக் கல்லூரி யை உடனடியாக அமைக்க  வேண்டும். பாதாளச் சாக்க டைக்கு புதிய நவீன திட்  டத்தை அறிவித்து செயல் படுத்த வேண்டும். மயிலாடு துறை மாவட்டத்தில் மீன வர்கள் நலவாரிய செயல் பாட்டை முறைப்படுத்த வேண்டும். மயிலாடுதுறை மாவட்ட பேருந்து நிலையம் மற்றும் புறவழிச்சாலை  பணிகளை விரைந்து முடிக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. 

வரவேற்புக்குழு தலைவர் டி.துரைக்கண்ணு நன்றி கூறினார்.