districts

img

குடிமனைப் பட்டா கோரி வாஞ்சியூர் மக்கள் மனு

மன்னார்குடி, ஜூலை 27- திருவாரூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட வாஞ்சியூர் கிராம மக்கள் 50 ஆண்டுகளாக   தாங்கள்  குடியிருந்து வரும் வீட்டிற்கான பட்டா கோரி மன்னார் குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு  கொடுத்தனர். மனு கொடுக்கும் இந்த இயக்கத் திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால்  தலைமை வகித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட  வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்   மனுக்களின் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த இயக்கத்தில் கட்சியின் கிளைச் செய லாளர் கவியரசன், சிஐடியு இணைப்பு சங்க தலை வர்கள் ஆர்.ரகுபதி, ஜி.முத்துகிருஷ்ணன், டி.ஜெகதீ சன், வாஞ்சியூர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். முதல் தவணையாக 50 குடும்பங்களின் மனுக்கள் அளிக்கப்பட்டன.