districts

img

மே 1 ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

மன்னார்குடி,ஏப்.22- திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி கிராமத் தில் ஆபத்சகா யேஸ்வரர் குரு பரிகார ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் திரு ஞானசம்பந்தரால் பாடல் பெற்றது நவகிரகங்களில் குரு பகவா னுக்கு பரிகார தலமாக விளங்கு கிறது. வலங்கைமான் அருகே சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் குரு பகவான் ஒருராசி யிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் அடையும் நாளில் குரு பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு குரு பகவான் வருகிற மே 1 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம் இந்த ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா  நடைபெற உள்ளது. தற்காலிக நிழற்கூரைகள் அமைக்கும் பணி  உள்ளிட்ட பல்வேறு முன்னேற் பாடு பணிகள் நடைபெற்று வரு கின்றன. குருபெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை விழா வருகின்ற 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும் பெயர்ச்சி க்கு பின்னர் மீண்டும் மே மாதம் 6 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் நடை பெற உள்ளது

 லட்சார்ச்சனை காலை 9.30  மணிமுதல் மதியம் 12 மணி வரை யிலும், மாலை 4.30 மணிமுதல் இரவு 7.30 மணி வரையிலும் நடை பெறும்.  ரிஷபம், மிதுனம், சிம் மம்,துலாம், தனுசு,கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் லட்சார்ச்சனை கட்டணம் ரூ.400. லட்சார்ச்சனையில் பங்கேற்க விரும்பும் பக்தர் தங்களுடைய பெயர், ராசி ஆகிய விவரங்க ளுடன் தொகையை மணியா டர் அல்லது டிமாண்ட் டிராப்ட்டாக ஆலய முகவரிக்கு அனுப்பி அஞ்சல் மூலமாக பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம்.

டிமாண்ட் டிராப்ட் எடுப்போர் உதவி ஆணையர்- செயல் அலுவலர் என்ற பெயருக்கு கும்ப கோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டி யூனியன் வங்கி(திருவாரூர்  மாவட்டம்) ஆலங்குடி-612801 கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப வேண்டும் .காசோலைகள் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆலங் குடிக்கு கொரியர் இல்லாததால் அஞ்சல் மூலமாக விவரங் களை அனுப்ப வேண்டும் என்றும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://www alangudiapathsagayees warar.hree.tn.gov.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ள லாம். விழா ஏற்பாடுகளை அற நிலைய துணை ஆணையர், கோயில் தக்கார் ராமு. துணை ஆணையர் -கோயில் செயல் அலு வலர் சூரிய நாராயணன் .கோயில் கண் காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.