districts

img

நகராட்சி ஆணையரான தூய்மைப் பணியாளரின் மகள்

மன்னார்குடி, ஜூன் 17 - மன்னார்குடி நகராட்சி தூய்மைப் பணியாளர் மறைந்த எஸ்.சேகரின் மகள் எஸ்.துர்கா, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-II தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி 

தந்தை-தாய் என குடும்பமே நகரத்தின் தூய்மைப் பணியாளர் களாக வாழ்க்கை நடத்திய போது, அக்குடும்பத்திலிருந்து அயராத உழைப் பின் மூலம் படித்து, முன்னேறி வேறு பல வாய்ப்புகள் கிடைத்த போதும், நகர நிர்வாகத்தின் ஆணையர் பொறுப்பை எஸ்.துர்கா தேர்வு செய்துள்ளார். 

திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான துர்காவின் கல்விச் சாதனையை பாராட்டி, திரு வாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் மற்றும் என்எம்ஆர் ஊழியர்கள், சிஐடியு சார்பாக, மன்னார்குடியில் அசோக் சிசுவிகார் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஞாயிறன்று பாராட்டு விழா நடைபெற்றது. 

கோ.ரகுபதி தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.பி.ஜோதி பாசு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் சி.பிர காஷ், அறிவொளி வாசிப்பு இயக்கத் தின் இரா.ஏசுதாஸ், தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் யு.எஸ்.பொன் முடி, உள்ளாட்சி சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கே.சிவசுப்பிர மணியன், நகரச் செயலாளர் ஜி.தாயு மானவன், சிஐடியு ஆட்டோ சங்க நகரச் செயலாளர் இரா.ஹரிஹரன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், தஞ்சை பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவி பேராசிரியர் முனைவர் ந.லெனின் ஆகியோர் துர்காவிற்கு சால்வை அணிவித்து சிறப் புரையாற்றினர். தோழமை தொழிற் சங்கத்தினர் துர்காவிற்கு பல்வேறு நினைவுப் பரிசுகளை வழங்கினர். நிறைவாக, துர்கா ஏற்புரையாற்றினார்.