மன்னார்குடி, மே 26- கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி காமகோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கும்பகோணத்தை தலைமையாக கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 6 சதவீதம் உயர்ந்து ரூபாய் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 138 கோடியாக அதிகரித்துள்ளது.
வங்கியின் வைப்பு தொகை 6 சதவீதம் உயர்ந்து ரூ.55,657 கோடியாகவும், கடன்கள் (அட்வான்ஸ்) கடந்த ஆண்டை விட 6 சதவீதம் உயர்ந்து ரூ.46,481 கோடியாகவும் உள்ளது. வங்கியின் மொத்த லாபம் ரூ.1,517 கோடியாகும். நிகர லாபம் 8 சதவீதம் அதிகரித்து, ரூ.1016 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ.2,123 கோடியாக உள்ளது. வங்கியின் நிகர மதிப்பு கடந்த ஆண்டில் இருந்த மதிப்பான ரூ.7,421 கோடியில் இருந்து அதிகரித்து ரூ.8,374 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த வராக்கடன் 3.99 சதவீதம், நிகர வாராக்கடன் 1.97 சதவீதம், மூலதன விகிதம் 23.84 சதவீத மாக உள்ளது. வங்கி இதுவரை 800 கிளைகளையும், 1,677 தானியங்கி பண பட்டுவாடா மெஷின்களையும்கொண்டு இயங்கி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.