தேனி ,மார்ச்.7- சர்வதேச மகளிர் தினத் தை முன்னிட்டு ஆயுள் காப் பீட்டு கழக ஊழியர் சங்கத் தின் சார்பில் பெரியகுளம் எல்ஐசி அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு கிளைத் தலைவர் என் .நாக பாண்டி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பி.சசி குமார் துவக்க உரையாற்றி னார். பெரியகுளம் மகளிர் பொறுப்பாளர் சார்பாக டி. ஷிலாதேவி விளக்கி பேசினார். பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை களை தடுக்க வேண்டும். அனைத்து பணியிடங்களி லும் பாலியல் வன்முறை தடுப்பு குழுக்கள் அமைவ தை உறுதி செய்ய வேண் டும்.பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீட்டை முறை யாக அமலாக்க வேண்டும் என மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசப்பட்டது. கிளை பொறுப்பாளர் பி. கரந்தமலை நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து இனிப்புகள் வழங்கி மகளிர் தினம் சிறப்பாக கொண்டா டப்பட்டது.