districts

தேனி மாவட்ட உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி

தேனி, ஜூலை 9- தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் வெளி சந்தைகளை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை  செய்யப்படுவதை பொதுமக் கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர்  ஆர்.வி.ஷஜீவனா தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெளி சந்தைகளில் தற் போது தக்காளி வரத்து மிக  குறைவாக உள்ளதால் சந்தை களில் தக்காளி மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்  பட்டு வருகிறது. எனவே, தக்  காளி விலையை கட்டுப்படுத்  தும் வகையில் தேனி மாவட் டத்தில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளை வேளா ண்மை துறையின் கட்டுப்பாட் டின் கீழ் செயல்படும் உழவர் சந்தைகளான தேனி, கம்பம், சின்னமனூர், பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி ஆகிய உழவர் சந்தைகளிலும், தோட்டக்கலை துறையின் கீழ் செயல்படும் டான்ஹோடா விற்பனை மையத்திலும், நட மாடும் காய்கறி வண்டிகளிலும் நேரடியாக விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. வெளிச்சந்தை விலை யை விட மிக குறைந்த விலைக்கு  தக்காளி விற்பனை செய்ய ஏற்  பாடு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.