மயிலாடுதுறை, ஏப்.10- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள தில்லையாடியில் பொதுநலச் சங்க மண்டபத்தில் ‘தில்லை யாடியின் வரலாறு’ என்கிற நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. தில்லையாடியின் சிறப்புகள் குறித்தும், வரலாற்று பெருமை கள் குறித்தும், பலரும் அறிந்தி ராத வரலாற்று உண்மைகளை தில்லையாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் சா. ஜெகதீசன் என்பவர் எழுதிய ‘தில் லையாடியின் வரலாறு’ என்கிற நூலில் ஆதாரங்களுடன் எழுதி யுள்ளார். இந்நூலின் வெளியீட்டு விழா விற்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தலைமை வகித்தார். தரங்கம்பாடி வட்ட ஓய்வுப்பெற்ற அலுவலர்கள் சங்க தலைவர் சு. ராஜமாணிக்கம் வரவேற்று பேசி னார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ஓய்வுப்பெற்ற இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் நூலை வெளியிட மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ குமார், முன்னாள் எம்.பி அம்பேத் ராஜன், பூம்புகார் கல்லூரி தமிழ்துறையின் ஓய்வுப்பெற்ற பேராசிரியர் த.அகரமுதல்வன், திண்டிவனம் சரஸ்வதி கல்லூரி யின் முன்னாள் முதல்வர் சத்திய மூர்த்தி ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை யாற்றினர். நூலை அச்சிட்ட சிதம்பரம் மணிபாரதி அச்சகத்தின் ச.மணி வண்ணன், செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஊராட்சி தலைவர் ரெங்க ராஜ்,தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி உள் ளிட்டோர் கலந்துக்கொண்டு சிறப் பித்தனர். நிறைவாக நூலின் ஆசி ரியர் சா.ஜெகதீசன் நன்றி கூறினார்.