தேனி ,மார்ச்.7- தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொ துக்கணக்குக் குழுவின் ஆய்வுக்கூட்டம் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங்,முன்னிலையில் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் கு.செல்வ பெருந்தகை தலைமையில் நடைபெற்றது .மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங்,தேனி மக்க ளவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குக் குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பி னர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோ.ஐயப்பன் ,எஸ்.சந்திரன்,ஐ.பி. செந்தில்குமார்,எஸ்.சேகர் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் , ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன், துணைச் செயலாளர் ஜெ.பாலசீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஆய்வு வடபுதுப்பட்டி ஊராட்சியில் கலைஞ ரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டினை பார்வை யிட்டார் . அல்லிநகரம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மாணவியர் விடுதியினை பார்வையிட்டு, விடுதியின் அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார் கள். மேலும், விடுதி மாணவியர்களின் கோரிக்கையை நிறைவேற்றது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்கள். தேனி தீயணைப்பு நிலையத்தில் தீ விபத்து மற்றும் தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் கருவிகள் குறித்தும், இயற்கை இடற்பாடுகள் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணியின் போது கொண்டு செல்லப்படும் உபகரணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் தீ அணைப்பு உபகரணங்கள் பயன்படுத்தும் முறை குறித்து அலுவ லர்கள் எடுத்துரைத்தனர். பின்னர், ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் தேனி-பூதிப்புரம் சாலைப் பணிகள் நடை பெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, உரிய காலத்திற் குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார்கள். கூட்டத்தில் மொத்தம் 46 பயனாளிகளு க்கு ரூ. 54,39,246/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொதுக்கணக்குக் குழுத்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்வுகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் வன பாது காவலர் / துணை இயக்குநர் திரு.ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ஐ.மகாலட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.